Connect with us

Raj News Tamil

“விவசாயிகள் கடன் தள்ளுபடி” – சட்டீஸ்கர் தேர்தல்! வாக்குறுதி அளித்த பூபேஷ் பாகல்!

இந்தியா

“விவசாயிகள் கடன் தள்ளுபடி” – சட்டீஸ்கர் தேர்தல்! வாக்குறுதி அளித்த பூபேஷ் பாகல்!

சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சிக் காலம் முடிவடைய இருப்பதால், சமீபத்தில் அந்த மாநிலத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்திற்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 7-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 17-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் குறுகிய காலங்களே இருப்பதால், பாஜகவும், காங்கிரஸ் கட்சியும், தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டீஸ்கர் மாநில முதலமைச்சருமான பூபேஷ் பாகல், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளார். மேலும், விவசாயிகளின் நலனுக்காவும், பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

தற்போது நடைபெற உள்ள தேர்தலில், விவசாயிகளின் வாக்குகள் தான், தேர்தலில் வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் காரணிகளாக இருந்து வருகின்றன. இதனால், அவர்களை கவரும் வகையில், பூபேஷ் பாகல் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் சென்ற முறை நடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 68 இடங்களையும், பாஜக 15 இடங்களையும் மட்டுமே பெற்றிருந்தது. இந்த முறை, 68 இடங்களை தாண்டி, 75 இடங்களில் வெற்றி பெறுவதற்கான இலக்கை, காங்கிரஸ் கட்சி நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் பெறும் வெற்றி தோல்விகள், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பது நிச்சயம் உறுதி. சட்டீஸ்கர் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள், வரும் டிசம்பர் 3 ஆம் தேதி அன்று, வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top