மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்த சவாலை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஏற்றுயுள்ளார்.
சத்தீஸ்கரில் உள்ள பண்டாரியா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர், கடந்த 5 ஆண்டுகளில் சத்தீஸ்கர் முதல்வர் செய்த பணிகள் குறித்தும், 15 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த பணிகள் குறித்தும் பாஜகவுடன் விவாதம் செய்யுமாறு பாகேலுக்கு அழைப்பு விடுத்தார்.
இதையொட்டி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “உங்கள் சவால் ஏற்கப்பட்டது அமித் ஷா. தயவுசெய்து தேதி மற்றும் நேரத்தைச் சொல்லுங்கள். பொதுமக்கள் ஏற்கெனவே மேடையை தயார் செய்துவிட்டனர். 15 வருடங்களில் நீங்கள் செய்த பணிகள் பற்றியும், 5 வருடங்களாக நாங்கள் செய்த பணிகள் குறித்தும் விவாதம் நடத்தத் தாயார்” எனப் பதிவிட்டுள்ளார். அதோடு இருபுறமும் அமித் ஷா, பூபேஷ் பாகேல் ஆகியோரின் பெயர்களைக் கொண்ட கருப்பு சோபாவும் இடம் பெற்றுள்ளது.