Connect with us

Raj News Tamil

வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழகம்

வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருவதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, “ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் அங்கு வாழும் தமிழர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அதில், கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்; செய்யப் போகிறீர்கள்; செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் அது பெருமைதான். இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

More in தமிழகம்

To Top