கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்.15) முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்குவதற்கான மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவற்றில் தகுதியான விண்ணப்பதாரர்களாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டமானது, முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கிவைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.