மேற்கு வங்க ஆளுநராக இருப்பவர் இல.கணேசன். தமிழகத்தை சேர்ந்த இவர், பாஜக-வின் மூத்த தலைவரகவும் இருந்தவர். இவரது சகோதரனின் 80-வது பிறந்த நாள் விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டர்.
இந்நிலையில் பாஜக-வை சேர்ந்த, இல்ல நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது தமிழக அரசியலில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் வருகின்ற நாடளுமன்ற தேர்தலின் கூட்டணிக்கான ஒத்தியகையாக கூட இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றன.