திமுக நிர்வாகிகளை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்..!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளையும் பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்ய பணிகளையும் தொடங்குமாறு கூறப்பட்டது.

தலைமையை மீறி வருந்தத்தக்க சில செயல்கள் நடப்பதாக திமுக நிர்வாகிகளை மு க ஸ்டாலின் கண்டித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என மு க ஸ்டாலின் கூறினார்.