பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.