தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜவஹர் நகரில் வீட்டின் முன் ஒன்றரை வயது குழந்தையை விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த தெருநாய்கள் குழந்தையை இழுத்துச்சென்று கொடூரமாக கடித்து குதறியது.
நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், நாய்கள் கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.