புதிய கொரோனா திரிபால் ஒரே நாளில் 5,000 பேர் பலி.. 10 லட்சம் பேர் பாதிப்பு.. உருவானது புதிய அலை!

கொரோனா வைரசின் பரவல் முடிவடைந்துவிட்டு என்று நினைத்த பொதுமக்களுக்கு, I AM Back என்று கொரோனா ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது. கொரோனாவின் புதிய திரிபான BF.7, சீனாவில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீனாவில் கடந்த 90 நாட்களாக, கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகிறதாம். இதனால், சீனாவில் இன்னொரு அலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டதட்ட, ஒரு நாளைக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனராம். மேலும், ஒரு நாளில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 90 நாட்களில் மட்டும், 3.7 லட்சம் பேர், புதிய கொரோனா வைரசால் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் இப்படியே தொடர்ந்து பரவி வந்தால், 90 நாட்களுக்குள், சீன மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கும், உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கும், இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.