வேண்டுமென்றே தனக்கு கொரோனா பாதிப்பை வரவழைத்துக் கொண்ட பாடகி..!

கொரோனா மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வைரஸ் தற்போது வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனை கட்ட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தொற்று நோய் நமக்கு வந்து விடக்கூடாது என்றுதான் பலரும் சொல்வார்கள். ஆனால் சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் என்பவர் புத்தாண்டு நிகழ்ச்சியின் போது நோய்த்தொற்றின் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக முன்னதாகவே கொரோனா பாதிப்பை வேண்டுமென்றே வரவழைக்க விரும்புவதாக கூறினார்.

நோயை வரவழைத்துக்கொண்ட அந்த பாடகி நான் குணமடைவதற்கு முன்பு எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நிறைய தண்ணீர் குடித்தேன் மற்றும் வைட்டமின் சி எடுத்துக் கொண்டேன்,” என்று ஜாங் கூறினார்.

சீன பாடகியின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.