சிரஞ்சீவி முன்னாள் மருமகன் மரணம்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவரது மகளான ஸ்ரீஜா கொனிடேலா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, வீட்டைவிட்ட வெளியேறி, சிரிஷ் பரத்வாஜ் என்ற நபரை திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்கள் இரண்டு பேரும், தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து, சிரிஷ் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த இவர், ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அந்த சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சிரிஷின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த சிலர், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக, தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, இரங்கல்களை கூறி வருகின்றனர். இந்த தகவலை அறிந்த பலரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News