“பணம் வருமா.. வராதா” – நிதி நிறுவன மோசடி! ஏஜெண்டின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடியில் பணத்தை இழந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், அந்நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்தவரின் வீட்டை முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. ஐ.எப்.எஸ் என்ற நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக பணியாற்றி வந்த இவர், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் , இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி கூறி வந்தார்.

இவரது வாக்கை நம்பி, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும், 80 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், பணத்தை முதலீடு செய்து பல மாதங்கள் ஆகியும், வட்டியும் கிடைக்காமல், முதலீடு பணமும் கிடைக்காமல், பொதுமக்கள் தவித்து வந்துள்ளனர்.

இறுதியில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், சத்தியமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு, நியாயம் கேட்க முயன்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்நிறுவன ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, பணத்தை முதலீடு செய்த பொதுமக்கள் அனைவரும், அங்கிருந்து களைந்து சென்றனர்.

RELATED ARTICLES

Recent News