Connect with us

Raj News Tamil

சித்தா ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

சினிமா

சித்தா ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் அருண்குமார். இந்த படங்களுக்கு பிறகு, நடிகர் சித்தார்த்தை வைத்து, சித்தா என்ற படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது. தியேட்டரில் இந்த திரைப்படத்தை பார்க்க முடியாத ரசிகர்கள், ஓடிடியில் வந்த பிறகு, பார்த்துவிடலாம் என்று காத்திருந்தனர்.

ஆனால், இன்றளவும், இப்படம் ஓடிடியில் வெளிவராமலே இருந்தது. இந்நிலையில், இப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான ஹாட் ஸ்டார் வாங்கியிருப்பதாகவும், வரும் நவம்பர் 17-ஆம் தேதி, இப்படம் வெளியாக இருப்பதாகவும், கூறப்படுகிறது.

More in சினிமா

To Top