உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில் மக்கள் திரளாக பங்கேற்பது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேசுவரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றன. இதையடுத்து காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை சார்பில் 4,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.