Connect with us

Raj News Tamil

சித்தா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

சினிமா

சித்தா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர், சித்தார்த்தை வைத்து சித்தா என்ற படத்தை எடுத்திருந்தார்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வெறும் 5 கோடி ரூபாயில் உருவான இப்படம், 25 கோடி ரூபாய் வரை, வசூலித்திருந்தது என்றும் கூறப்பட்டது.

இவ்வாறு இருக்க, இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும், இந்த திரைப்படம், வரும் ஆயுதபூஜை அன்று, வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top