Connect with us

Raj News Tamil

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சினிமா

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தபடத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி தங்கலான் படத்தின் டீசர் வரும் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

More in சினிமா

To Top