2025-ஆம் ஆண்டுக்காக சேம்பியன்ஸ் டிராபி போட்டி, கடந்த மாதம் 19-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. முக்கியமான 8 அணிகள் மட்டும் கலந்துக் கொண்ட இந்த போட்டியில், இந்தியாவும், நியூசிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன.
தற்போது, இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே, இந்த அணியின் வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறார்கள்.
இந்நிலையில், முதல் 25 ஓவர்களில், ஸ்கோர் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, முதல் 25 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்துள்ள நியூசிலாந்து அணி, 114 ரன்களை எடுத்துள்ளது.
ஒரு ஓவருக்கு 6 ரன்கள் எடுத்தாலும், 25 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், 114 ரன்களை மட்டுமே நியூசிலாந்து எடுத்துள்ளது. தற்போதைய சூழலில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 80 சதவீத வாய்ப்புகளும், நியூசிலாந்து வெற்றிப் பெறுவதற்கு 20 சதவீத வாய்ப்புகளும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.