இன்னொரு அதிரடி பேட்ஸ்மேன் தமிழ் சினிமாவில் அறிமுகம்!

இயக்குநர்கள் நடிகர்களாக மாறி வருவதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், சமீப காலங்களாக, கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களாக மாறி வருகின்றனர்.

ஹர்பஜன் சிங், இர்பான் பதான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள், தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன கிறிஸ் கெயில், தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

ஹிட் விக்கெட் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில், கபாலி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இந்த திரைப்படத்தில், ரவி, நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.