கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது Windows 7 மற்றும் Windows 8.l-க்கு க்ரோம் பதிப்பின் ஆதரவை நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. அதாவது விண்டோஸ் 7 மற்றும் 8.1 பதிப்புகளை மடிக்கணினியில் வைத்திருப்பவர்கள் கூகுள் குரோம் பயன்படுத்த முடியாது.
ஜனவரி 1 முதல் கார்டு எண் மற்றும் காலாவதி விவரங்களை கூகிள் சேமித்து வைக்காது. ஆன்லைனில் பணம் செலுத்துவது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் ஸ்டேடியா சேவை ஒரு கிளவுட் கேமிங் சேவையாகும். கூகுள் இந்த சேவை ஜனவரி 18 வரை மட்டுமே இருக்கும். Google Stadia சேவை நிறுவனம் பயனர்களிடையே பிரபலம் ஆகவில்லை. இதன் காரணமாக சேவையை நிறுத்திவிட கூகிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.