Connect with us

Raj News Tamil

விஷாலின் படிப்பிடிப்பு தளத்தில் லாரி மோதி விபத்து..!

சினிமா

விஷாலின் படிப்பிடிப்பு தளத்தில் லாரி மோதி விபத்து..!

லத்தி படத்திற்கு பிறகு விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இது விஷாலின் 33-வது படமாகும்.

மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

அதில் நேற்று இரவு ஒரு லாரி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது லாரி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் சென்று மோதியது.

அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட தொழிலார்கள் லாரி நிற்காமல் வருவதை பார்த்த தொழிலாளர்கள் இரண்டு புறமும் சிதறி ஓடினர். இதில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top