சினிமா
“கோள்மூட்டி விட்ட பிரபல நடிகர்” – மானத்தை வாங்கிய ப்ளு சட்டை மாறன்!
இசையமைப்பாளர் டி.இமான், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அதனால், அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இவரது இந்த பேட்டி, இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் தனது ட்விட்டர் பக்கத்தில் Poll- ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அதாவது, கணவன்-மனைவி இடையே கோள்மூட்டி விட்டு, குடும்பத்தை பிரித்த சி.எஸ்.கே-வின் செயல் பற்றி உங்கள் கருத்து என்று அந்த Polling தயார் செய்திருந்தார்.
மேலும், அந்த செயல் சரியானது என்றும், கேவலமானது என்றும் இரண்டு ஆப்ஷன்களை வழங்கியிருந்தார்.
இதில், கேவலமானது என்ற ஆப்ஷனை தான், 80 சதவீத நெட்டிசன்கள் ஓட்டு போட்டுள்ளனர். இந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.

