100 ரூபாய்க்கும் குறைவான விலையில் சினிமா டிக்கெட்கள் – எப்போது?

மக்களிடையே, காலம் காலமாய் சினிமாவின் மீது உள்ள காதல் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக அக்டோபர் 13ஆம் தேதி தேசிய சினிமா தினமாக கொண்டப்படுகிறது.

இந்நிலையில், ‘மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சுமார் 4,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில், டிக்கெட் கட்டணம் 99 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், டிலைட் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்தக் கட்டணக் குறைப்பு இருக்கும் என்றும் 4டிஎக்ஸ், ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கு இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News