சென்னை ரயில்வே கட்டுப்பாட்டறைக்கு தனியார் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீசார் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் சென்று விசாரித்த போது திருத்தணியில் இருந்து வந்த மின்சார ரயிலில் இரண்டு தனியார் கல்லூரி மாணவர்கள் ஏறியதாகவும், அதன் பின் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கட்டை மற்றும் பாட்டிலால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு நடை மேடையை விட்டு வெளியே ஓடி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரயில்வே காவல் நிலையத்தில் இருக்கக்கூடிய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.