எருமப்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் சகா மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எருமப்பட்டி அருகே நவலடிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஆகாஷ் ( 16) வரகூர் அரசு உயர்மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி வளாகத்தில், அதே வகுப்பில் படிக்கும் செல்லிபாளையத்தை சேர்ந்த சுப்பரமணி மகன் ரீத்தீஸ் (16) என்ற மாணவரும், அகாஷ்சும் ஒருவருக்கொருவர் கையால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதில், ரீத்தீஸ், ஆகாஷ்சை கண்ணத்தில் தாக்கி யுள்ளார். அப்போது, ஆகாஷ் தீடீர் என பள்ளியிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதை பார்த்த அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மயங்கி விழுந்த மாணவர் ஆகாஷ்யை உடனடியாக பவித்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் உடலில் அசைவு இல்லாததால் எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழத்ததை உறுதிப்படுத்தினார்கள்.
இதையடுத்து, அவரது உடலை பிரோத பிரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் எருமப்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.