கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா 2.
இந்த திரைப்படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஹீஸ்ட்வுட் சம்பந்தமான பல்வேறு காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தை குறித்து, நெட்டிசன் ஒருவர் இணையத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், இப்படத்தை பார்க்க சொல்லி, பிரபல நடிகர் கிளின்ட் ஹீஸ்ட்வுட்டையும் டேக் செய்திருந்தார்.
அவரது ட்வீட்டை பார்த்த கிளின்ட் ஹீஸ்ட்வுட், அப்படத்தை விரைவில் பார்ப்பதாக கூறியுள்ளார். இந்த ட்வீட், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.