தமிழ்நாடு பட்ஜெட் 2023 : அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது பள்ளி கல்வித் துறை தொடர்பான வெளியிட்ட அறிவிப்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது, 500 கோடி ரூபாய் செலவில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என குறிப்பிட்டார்.

புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக பள்ளி கல்வி துறைக்கு 40,290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News