மேற்கு வங்காளம் மாநிலத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி, பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக, தங்களுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகை, மத்திய அரசிடம் இருந்து, இன்னும் வரவில்லை என்றும், தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாக்டோக்ரா விமான நிலையத்தில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தன்னுடைய எம்.பி-க்களை அழைத்துக் கொண்டு, டெல்லி செல்ல உள்ளேன் என்றும், பிரதமர் மோடியை சந்தித்து, மாநிலத்திற்கு சேரவேண்டிய நிலுவைத் தொகையை தரவேண்டி அழுத்தம் கொடுக்க உள்ளேன் என்றும், கூறியுள்ளார்.
மேலும், டிசம்பர் 18, 19, 20 ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் தான், பிரதமர் மோடியை சந்தித்து, இதுகுறித்து பேச உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் பல்வேறு விதமான திட்டங்களுக்கான நிதியை பெறுவதற்கு, மேற்கு வங்க மாநிலம் தகுதியாக உள்ளது. ஆனால், அந்த நிதியும் மத்திய அரசு வழங்குவதில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசிடம் இருந்து தர வேண்டிய நிலுவைத் தொகை, தராமல் இருப்பதால், மேற்கு வங்க மாநிலத்தில் திட்டங்களை செயலபடுத்துவதற்கான நிதி இல்லாமல் இருந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், தனது சொந்த வளங்களை பயன்படுத்தி, மேற்கு வங்க அரசு இயங்கி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.