“இது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல” – முதலமைச்சரின் அதிரடி பதிவு!

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர், இன்று நடைபெற்றது. முதல் நாள் என்பதால், ஆளுநர் உரையுடன், கூட்டத் தொடர் தொடங்குவது மரபு. ஆனால், தேசிய கீதம் பாடவில்லை என்பதால், தனது உரையை நிகழ்த்தாமல், சட்டமன்றத்தில் அவர் வெளியேறினார்.

இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு, திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.

தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

“தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News