பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை, மாநில அரசுகள் தான் நியமனம் செய்து வந்தன. ஆனால், தற்பேது வெளியாகியுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளின் படி, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம், ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த விதியை எதிர்த்து, இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “UGC இந்த நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என்றும், “தமிழகத்தின் உயர்கல்வி முறைக்கு, இந்த விதிகள் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “இது மாநில அரசை சிறுமைப்படுத்தும் செயல்” என்றும், “மாநில அரசின் கல்வி நிறுவனங்களை, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது” என்றும் கூறினார்.