தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இருப்பது பொங்கல். இந்த திருநாள், 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
முதல் நாளில், சூரிய பகவானுக்கும், இரண்டாவது நாள் மாடுகளின் மேன்மையை போற்றும் வகையிலும், 3-வது நாள் உழவர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி 14-ஆம் தேதியான இன்று, பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “”உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் – உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்” என்று கூறியுள்ளார்.