வரும் 2026-ஆம் ஆண்டு அன்று, தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைப்பதாக, நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ஊழல் தான் என்று விமர்சித்துள்ளார்.
மேலும், 2 ரெய்டுகள் நடந்தவுடன், அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தற்போது தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சீரழிக்க பாஜக நினைக்கிறது என்று விமர்சித்த முதலமைச்சர், பாஜகவுக்கு பாடம் புகட்டுவதற்கு, தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும், துரோக கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள் என்றும், அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.