தமிழ்நாடு அரசின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில், அரசு ஊழியர்களின் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அவற்றின் மீது முடிவுகளை எடுப்பதற்கு, அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர்களின் சங்க நிர்வாகிகள் உடனான பேச்சுவார்த்தை, நாளை தலைமை செயலகத்தில் நடைபெற இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.