விருதுநகர் அருகே, புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் 38 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.
எனவே, புதிய ஆட்சியர் அலுவலகத்தை கட்டித்தர வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, 77 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டிடம் ஒன்றை கட்டி முடித்துள்ளது.
இந்நிலையில், அரசு பணிகளுக்காக விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.