மருத்துவமனையில் தயாளு அம்மாள்..! மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர்..!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மனைவியுமானவர் தயாளு அம்மாள். 92 வயதான இவருக்கு, நேற்றிரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நேற்றைய தினத்தை காட்டிலும், தற்போது அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், தயாளு அம்மாள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். இதேபோல், தாயின் உடல்நலம் குறித்தும், அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் விசாரிப்பதற்கு, முதல் மகன் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News