திமுக-வை தோற்றுவித்தவரும், திராவிட சித்தாந்தத்தின் முன்னோடியும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின், 56-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தையொட்டி, திமுகவினர் சார்பில், அமைதி பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின் முடிவில், அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என்று பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டனர்.