ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2-ஆம் நாள், மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதோடு சேர்த்து, திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
மேலும், அங்கிருந்த திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சரை தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர், திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.