அதிமுக கூட்டணியில், பாமக இணைய உள்ளது என்ற தகவலில், எந்தவொரு உண்மையும் இல்லை என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஆங்கில நாளிதழுக்கு, பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும், எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்றும், தன்னை ஒரு தீவிர பாஜகக்காரராக ஆளுநர் காட்டிக் கொள்கிறார் என்றும், தெரிவித்தார்.
மேலும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில், ஆளுநர் ஒரு தபால்காரர் தான் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, திமுக கூட்டணியில், பாமக இணைய உள்ளதா? என்ற கேள்விக்கு, அந்த தகவலில் எந்தவொரு உண்மையும் இல்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணி, தமிழ்நாட்டில் மிகவும் வலுவாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு மதிப்பளிப்பதாகவும், முதலமைச்சர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.