12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளையும், 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், 5-ஆம் தேதி அன்றும், பொதுத் தேர்வு நடக்க உள்ளது. இந்த இரண்டு பொதுத் தேர்வுகளையும், மொத்தமாக 16.5 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வாழ்த்து செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில், மாணவர்கள் தேர்வினை மன அமைதியுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை நீங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், நல்ல முடிவுகளை உங்களுக்கு பெற்றுத்தரும் என்றும், அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு உறுதுணையாக அரசும், தானும் இருப்பதாக, முதலமைச்சர் அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.