மத்திய அரசின் கல்விக் கொள்கையை அரசு ஏற்றுக் கொண்டால் தான், கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், புதிய கல்விக் கொள்ளையில், மறைமுகமாக இந்தி திணிக்கப்படுகிறது என்றும், ஆளுங்கட்சி கூறி வருகிறது. இவ்வாறு இருக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற பெயரில், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஆதிக்க மொழியின் படையெடுப்பை, பாதுகாக்கும் அரண் தான் திராவிட இயக்கம் என்று தெரிவித்தார். மேலும், இந்தியை ஏற்றுக் கொண்ட பல்வேறு மாநிலங்களின் தாய்மொழி, தற்போது சிதைந்துவிட்டது என்றும், மொழியை அழிப்பதே மத்திய பாஜக அரசின் கொள்கை என்றும் கூறினார். தொடர்ந்து, இந்தி வெறும் முகமூடி தான். அதற்குள் ஒழிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம் என்றும் கூறி, தனது பதிலடியை கூறினார்.