தமிழக மீனவர்கள், மீன்பிடிக்க செல்லும்போது, இலங்கை கடற்படையால், தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், அடிக்கடி நடந்து வருகிறது.
தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த மாதிரியான சம்பவங்களை, இந்திய அரசால், தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர், கச்சத்தீவு பகுதிகளுக்கு, மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை மீறி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவம், தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட 27 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.