மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இருப்பதாக, மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் வலுவானதையடுத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக, நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க போராட்டக் குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளனர்.
மேலும், அரிட்டாபட்டியில் நாளை நடைபெற உள்ள பாராட்டு விழாவில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும், அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த அழைப்பை ஏற்று, பாராட்டு விழாவிற்கு, முதலமைச்சர் நாளை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, விமானம் மூலமாக, அந்த நிகழ்வில் அவர் கலந்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.