சத்யராஜ்-க்கு ஆறுதல் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சத்யராஜ். பாகுபலி 1, 2 ஆகிய படங்களின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமான இவர், தற்போது பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில், இவரது தாயார் நாதாம்பாள் என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார். சத்யராஜின் இந்த பேரிழப்புக்கு, திரைத்துறையினரும், ரசிகர்களும், இரங்கல்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், சத்யராஜின் வீட்டிற்கு இன்று சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு தனது இரங்கல்களை கூறி உள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்களும், சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News