Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

வடிவேலுவின் தாயார் உயிரிழப்பு.. இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகம்

வடிவேலுவின் தாயார் உயிரிழப்பு.. இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவரது தாயார் சரோஜினி என்கிற பாப்பா-வுக்கு 83 வயதாகிறது. மதுரை மாவட்டம் விரகனூரில் வசித்து வரும் இவருக்கு, கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு இருந்து வந்தது.

இந்நிலையில், மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த பல்வேறு சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடிவேலுவின் தாயார் மறைவு குறித்து இறப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

ஆளாக்கி அழகுபார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். ‘வைகைப் புயல்’ வடிவேலு மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top