இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணு, சமீபத்தில் 100 வயதை கடந்தார். இதனை முன்னிட்டு, சென்னையில் உள்ள கலைவானர் அரங்கில் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில், முதலமைச்சர் கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நல்லக்கண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளதாகவும், தான் அவரை வாழ்த்த வரவில்லை, வாழ்த்து பெற வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நல்லக்கண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது, எனக்கு கிடைத்த பெருமை என்றும் அவர் கூறினார். தனது சிறப்புரையை தொடர்ந்து, நல்லக்கண்ணு குறித்து எழுதப்பட்ட “நூறு கவிஞர்கள் – நூறு கவிதைகள்” என்ற கவிதைத் தொகுப்பையும், முதலமைச்சர் வெளியிட்டார்.