கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில், பள்ளிக்கல்வித்துறை சார்பிலும், தமிழ்நாடு மாநில பெற்றோர் கழகம் சார்பிலும், நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் கலந்துக் கொண்டு, அப்பா என்ற புதிய செயலியை வெளியிட்டார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தவர்களிடம் உரையாற்றினார். அப்போது,“தேசிய கல்விக் கொள்கை நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும்” என்றும், “இந்த கொள்கை, மாணவர்களை பள்ளிக் கூடங்களில் இருந்து விரட்டும்” என்றும் தெரிவித்தார்.
மேலும், தேசியக் கல்விக் கொள்கையால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பட்டியலிட்ட முதலமைச்சர், பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்றாலும், நான் இந்த கல்விக் கொள்கையை அமலுக்கு கொண்டு வர கையெழுத்திட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “2 ஆயிரம் கோடி ரூபாய்க்காக நாங்கள் தற்போது கையெழுத்திட்டால், நம்முடைய தமிழ் சமூகம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிடும்” என்று கூறினார்.