உங்களின் ஒருவன் பதில்கள் என்ற பெயரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, முதலமைச்சர் தொடர்ச்சியாக பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில், சிலர் அப்பா என்று அழைக்கிறார்களே? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், தலைவர், முதலமைச்சர் என்ற பொறுப்புகளில், காலப்போக்கில் மற்றவர்கள் வரக்கூடும். ஆனால், இளைய தலைமுறையினர் என்னை அப்பா என்று அழைப்பது, என்றும் மாறாது என தெரிவித்தார்.
மேலும், அந்த சொல் என்னுடைய பொறுப்புகளை கூட்டியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு, தன்னுடைய தெளிவான பதில்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.