செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு, ஆயிரத்து 285 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், நிறைவுற்ற திட்டங்களையும் துவக்கி வைத்தார். இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், கல்வி நிதியை வழங்குவேன் என்று மத்திய கல்வி அமைச்சர் திமிராக பேசுகிறார்.
இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை, மத்திய அரசு ஒழிக்க முயற்சிக்கிறது” என்று கூறினார்.
மேலும், “10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்க மாட்டோம்” என்றும், அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.