வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக, அயலக தமிழர் தினம் என்ற விழா, ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில், தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தன்னுடைய அரசியல் வாழ்க்கையில், வேர்களை தேடி என்ற திட்டம் ஒரு மைல் கல் என்றும், இந்த திட்டத்தின் மூலமாக, 4 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 2 ஆயிரத்து 414 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், அயலக தமிழர்களுக்கு கலை பயிற்சிகள் வழங்குவதற்காக, 100 ஆசிரியர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும், 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தன்னுடைய ஸ்டைல் சொல் அல்ல, செயல் என்று கூறினார்.