63 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு – அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் பதிவு!

தமிழகத்தின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருப்பதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு இருக்க, இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர்,

மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் – நகராட்சிகள் – மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!

6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்!

உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன!” என்று கூறினார். இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES

Recent News