கீழடி இணையதளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு விழா, இரும்பின் தொன்மை என்ற நூலின் வெளியிட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகள், நாளை நடைபெற உள்ளது.
இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் முருகானந்தம் உட்பட பலர் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!” என்று கூறியுள்ளார். முதலமைச்சரின் இந்த பதிவு, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.